பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்றம் இன்று(27) காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இன்றைய அமர்வின்போது அவரசகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்தமை தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளதுடன், இதற்கான வாக்கெடுப்பு இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.