நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதிவரை பிற்பகல் வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் இன்று பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் எனவும், ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.