இன்று பிறப்புறுப்பு அழித்தல் தடுப்பு தினம் – ஒருநாளைக்கு 6000 பெண்களின் பிறப்புறுப்புகளை அறுக்கும் கொடூரம் (VIDEO)

பேடு நீங்கி பிறத்தல் அரிது. அப்படியிருக்க, பெண்ணாக பிறந்தவளை ஒரு பேடாக மாற்றுவது எவ்வளவு கொடிது.
ஒருநாளைக்கு 6000 பெண் குழந்தைகளின் உறுப்புகள் அறுத்து வீசப்படுகிறது.

பிள்ளைகளுக்கு அந்த கொடுமையை பெற்றோர்களே செய்து வைக்கும் பாவத்தை தூண்டும் இந்த சமுதாயத்தின் முகம் பயங்கரமானது.

உலகம் முழுதும் பிறப்புறுப்பு அழிக்கப்பட்ட(Female genital Mutilation) பெண்களின் எண்ணிக்கை இதுவரை சுமார் 20 கோடி.

இந்த போக்கு நீடித்தால், 15- 19 வயதுக்கு உட்பட்ட 1.5 கோடி பெண்கள் 2030 க்குள் மேலும் அதிகரிப்பார்கள் என்ற தகவல் முழு உலகை அச்சுறுத்துகிறது.

இதில் 14 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ளவர்கள் 4.4 கோடி பேர்.

பெண் உறுப்பை தைத்துக்கொள்வது, மார்பகங்களையும், மர்ம உறுப்பையும் தீயால் பொசுக்கிக்கொள்வது போன்ற ஏதோ ஒரு வழியில் பிள்ளைகளின் பெண்மையை பெற்றோர்களே சிதைத்துவிடுகின்றனர்.

கம்பியாவில் 56 சதவீதம், மவுரிடானியாவில் 54 சதவீதம் 14 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் 50 சதவீத பெண்கள் , தனக்கு என்ன நடக்கிறது என்பதை புரியாமலே தாங்கிக்கொள்கின்றனர். ஆனாலும் ஒரு பெண் தாங்கிக்கொள்ள கூடிய விடயமல்ல.

[youtube url=”https://www.youtube.com/watch?v=IOGQ-_o3Lq0″ width=”560″ height=”315″]

வல்லுறவுக்கு பயந்து கடைசிவரை உடலுறவுக்கே வழியில்லாமல், யுவதி பருவத்திலே வியாதிக்கு வழி செய்துவிடுகின்றனர்.

கல்வி நாகரீகம் இல்லாத பெற்றோர்கள் தங்கள் மகள் எங்கேனும் ஆண் மிருகம் தாக்கி கருவை சுமந்துகொண்டு வந்து நிற்கக்கூடாது.

அது தன் மகளின் வாழ்க்கையையே சூன்யமாக்கிவிடும் என்ற பயத்தால் இதை செய்கின்றனர்.

புறவாழ்க்கையை கவனித்து, அவர்களின் அகவாழ்வை பாழ்படுத்திவிடுகின்றனர்.

பெண்ணுரிமைக்காக உலகில் போராட வேண்டியவர்கள், பெண்ணாக வாழ்வதற்கே பெற்றோரிடம் கூட போராட வேண்டிய நிலையில் இல்லை.

இதனால், ஆண்பெண் விகிதாசரம் பாதிக்கப்படுகிறது, மனித உரிமைகள் மீறப்படுகிறது. சர்வதேச சக்தியே சபிக்கப்படுகிறது.

Female-genital-Mutilation blate

உலக அமைப்புகளான UNFPA மற்றும் UNICEF இணைந்து, முதல் கட்டமாக 17 ஆப்பிரிக்க நாடுகளை சீர்திருத்த தேர்வு செய்துள்ளது.

இதற்கு, பிராந்திய ஆதரவாளர்களையும் உலகளாவிய ஆதரவாளர்களையும் செர்த்துக்கொண்டு செயல்படுகிறது.

இந்த பெண்கொடுமையை அடுத்த 15 ஆண்டுக்குள் முற்றிலும் தடுத்து நிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது.

பெண் பிறப்பு உறுப்பு அழித்தலால், அதிக ரத்தப்போக்கு, குழந்தை இறப்பு பிரசவ அதிகரிப்பு, கட்டிகள், நோய் தொற்றுகள், மலட்டுத்தன்மை போன்ற பல சிக்கல்களும் உடலில் சுகாதார பிரச்சினைகளும் ஏற்படுகிறது.

அந்த அப்பாவி ஜனங்கள் எந்த மருத்துவ ஆலோசனையும் இல்லாமல் பின்விளைவுகளையும் யோசிக்காமல் ஒரு பொருளை உருக்குலைப்பதுபோல அக்கம்பக்கத்தினர் ஆலோசனையில் செய்கின்றனர்.

செக்ஸை தீவிரமாக, சீர்திருத்தத்தை சிரமமாக கருதுகின்றனர். இவர்கள் கல்வி நாகரீகமுள்ள உலக நீரோடையில் கலப்பதே இதற்கு சரியான தீர்வு.

ஈடில்லா இன்பத்தையும் இனப்பெருக்கத்தையும் இயற்கை ஒருவழிப்பாதை ஆக்கியிருப்பதால், முள்ளில் சேலையாய் மெல்லவே வெல்ல வேண்டும்.