இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சுமார் 75mm மழை பெய்யக்கூடும் என திணைக்களம் இன்று(05) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

#rishma…