இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை…

நாட்டில் நிலவும் வறட்சி காலநிலையில் இன்று(24) சிறு மற்றம் ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, மாகாணங்களுடன் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறித்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் நாட்டின் வடக்கு பகுதியிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 – 45 Km வரை அதிகரித்து வீசக்கூடும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#rishma