இன்று புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெறும்…

சில கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தமானது நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இன்று(13) புகையிரத சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

புகையிரத சாரதிகள் உரிய இடங்களுக்கு இன்னமும் செல்லாத காரணத்தினால் சில புகையிரத சேவைகள் மாத்திரம் தாமதமாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று(12) ஜனாதிபதியின் செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி கண்டுள்ள நிலையில் குறித்த வேலை நிறுத்தம் நிறைவுக்கு வந்துள்ளதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது புகையிரத தொழிற்சங்க அமைப்புக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக குழுவை நியமிப்பதாகவும் பிரச்சினைகளுக்கு ஒரு மாதகாலத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும் முடிவானதாக புகையிரத தொழிற்சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.