வெள்ள நிலை காரணமாக தென்மாகாண பாடசாலைகளுக்கு இன்று(29) மற்றும் நாளை(30) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென்மாகாண கல்வியமைச்சர் சந்திம ராசபுத்ரா தெரிவித்துள்ளார்.
நேற்று(28) அனர்த்த நிலைமைகளை பார்வையிடச் சென்ற போது இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அது தவிர்ந்த, அனர்த்தத்திற்கு முகங்கொடுக்காத பிரதேச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.