இன்று மற்றும் நாளை 04 மாகாணங்களில் கடும் மழை..

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று (23) மற்றும் நாளை (24) பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் 50  மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை , வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் , சபரகமுவ, மேல், தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மழை பெய்ய கூடும் எனவும் திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

.