இன்று முதல் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு வழக்குத் தாக்கல்

வேகக் கட்டுப்பாட்டு எல்லைகள்” காட்சிப்படுத்தப்பட்டுள்ள வீதிகளில் அதிக வேகத்துடன் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக இன்று (11) முதல் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் சில வீதிகளில் வேகக் கட்டுப்பாட்டு எல்லைகள் பொறிக்கப்பட்ட பதாதைகளை காட்சிபடுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வேகக் கட்டுப்பாடுகளை மீறும் வகையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு உடனடியாக தண்டப் பத்திரம் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்