இராமேஸ்வரம் விசைத்தறி மீனவர்கள் இன்று (11) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொள்கின்றனர்.
இலங்கையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க இந்திய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறால் விலை நிர்ணய பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகின்றது.
இதேபோல் புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினம் மீனவர்களும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என, தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.