கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்வது தொடர்பாக இன்று(04) முதல் சி.சி.டி.வி பதிவுகளை பயன்படுத்தவுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதனோடு இது தொடர்பாக காவற்துறை ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.
இதற்காக கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள 105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.