இன்று முதல் கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை வீதியூடனான போக்குவரத்து தற்காலிகமாக மூடப்படும்…

கொட்டாஞ்சேனை அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று(06) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை, இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படவுள்ளமையால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நீர்க் குழாய் சீர்திருத்த பணிகள் காரணமாக இவ்வீதியூடான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.