கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கே.சிறில் பெரேரா மாவத்தை, இன்றிரவு(18) 10 மணி முதல் 5 மணித்தியாலத்திற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்க்குழாய் அகழ்வுப் பணிகள் காரணமாக வாசல சந்தி முதல் வோல்ஸ் ஒழுங்கு வீதி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.