இன்று முதல் சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், மாதிரி பரீட்சைகள், உதவி வகுப்புகள் போன்றவற்றை நடாத்துவதற்கு இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

02ம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடிவடையும் 17 ம் திகதி வரையில் இத்தடை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பிக்கவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 17ம் திகதியுடன் நிறைவடையும்.

எதிர்வரும் டிசம்பர் 08ம் திகதி, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளதனால், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் குறிப்பிட்ட தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் நலன் கருதி, தேசிய ரீதியில் நடாத்தப்படும் பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், இத்தடைக்கான சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.