இன்று முதல் சிறப்பு பேரூந்து ஒழுங்கை அமுலுக்கு..

பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை பேரூந்து மற்றும் வேன் ஆகியவற்றுக்கான சிறப்பு பேரூந்து ஒழுங்கை இன்று(06) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் பொதுப் போக்குவரத்தை இலகுபடுத்தவும் நகருக்குள் ஏற்படக் கூடிய வாகன நெரிசலை குறைக்கவும் முடியும் என அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் இயங்கும் அரச பாடசாலைகள் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் இன்று(06) திறக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)