டெங்கு நோய் நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் இன்று முதல் தெரிவுசெய்யப்பட்ட பல பகுதிகளில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொது வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 38,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இவர்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் மீண்டும் பரவும் அபாயம் நிலவுவதாகவும் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொது வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.