நாட்டில் இன்று(20) முதல் எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு கரையோர பிரதேசங்களில் பல இடங்களில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் சுமார் 75 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் எனவும் இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.