பெற்றோல் நிரப்புவது குறித்து அரசிடமிருந்து விசேட சுற்றறிக்கை..

வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கை ஒன்று இன்று(07) வௌியிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கலன் மற்றும், போத்தல்களுக்கு பெற்றோலை விநியோகிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்வரும்  9 ஆம் திகதி வரை இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.