இன்று முதல் விரிவுரைகளில் சமூகமளிக்கவுள்ள மருத்துவ பீட மாணவர்கள்…

அரச மருத்துவ பீட மாணவர்கள் இன்று(20) முதல் விரிவுரைகளுக்கு சமூகமளிக்க உள்ளதாக மருத்துவ பீட மாணவ ஒன்றியத்தின் இணைப்பாளர் ரயன் ஜயலத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த 10 மாதங்களுக்கு மேல் அவர்கள் மேற்கொண்டு வந்த வகுப்பு புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாலபே மருத்துவ கல்லூரியை இரத்துச் செய்யுமாறு கோரி நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ பீட மாணவர்கள் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வகுப்பு புறக்கணிப்பை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.