இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்…

சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(29) முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத தொழில்நுட்ப சேவை தொழிற்சங்கக் குழுவின் தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.

இன்று(29) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 4 மணி வரை இந்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என குறித்த குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர்களுடைய கோரிக்கைகள் தொடர்பில் போக்குவரத்து அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.