இன்று முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரஃப் இன் 15ஆவது நினைவு தினம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும், அமைச்சருமான மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரஃப் இன் 15ஆவது ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பகுதியில் உரக்கந்த மலைத்தொடர்மேல் இலங்கை விமானப்படையின் எம்.ஐ- 17 ரக ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகியதில் எம். எச். எம். அஷ்ரஃப் தனது 51ஆவது வயதில் மரணமானார்.