ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (13) நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.
இதன்போது, முப்படைகளின் பிரதானி ரவீந்திர விஜேகுணவர்தனவை கைது செய்வது குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) நண்பகல் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அவசர அமைச்சரவை கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளார்.
குறித்த அவசர அமைச்சரவை கூட்டம் தொடர்பில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தால் தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்று(12) நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.