(FASTNEWS | COLOMBO) – சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும், இன்று(04) மாலை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடர்ந்தும் நீடிக்கும் என திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.