நீர்கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் இன்று(02) 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
குறித்த இந்த நீர்வெட்டு இன்று(02) மு.ப.11.00 மணி முதல் நாளை(03) அதிகாலை 3.00 மணி வரையிலான காலப் பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, தூவபிடிபன பகுதி, கட்டுநாயக்க விமானப் படைத்தளம், கட்டுநாயக்க ஏற்றுமதி முதலீட்ட வலயம், கட்டுநாயக்க விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இந்நீர்வெட்டு அமுலில் இருக்கும் எனவும் குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
(rizmira)