இன்று 18 மணிநேர நீர் விநியோக தடை…

திருத்த பணிகள் காரணமாக களனி, வத்தளை மற்றும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று(17) காலை 9.00 மணி முதல் நாளை(18) அதிகாலை 03.00 மணி வரை 18 மணிநேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களனி மற்றும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதி, பேலியகொட மற்றும் வத்தளை – மாபோலை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதியின் கோனவல வீதி, மகுரூவில வீதி, விஜயராம வீதி மற்றும் பெல்லேகல ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.