இன்று 06 மணி நேரம் மூடப்படவுள்ள விமான நிலையம்…

ஓடுபாதை பராமரிப்பு பணிகளுக்காக மும்பை விமான நிலையம் இன்று(23) 6 மணி நேரம் மூடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(23) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வைர விமான நிலையம் மூடப்படுகிறது.

மும்பை விமான நிலையத்தில் அக்டோபர் மற்றும் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக ஓடுபாதை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதற்கட்டமாக இன்று பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன.

பராமரிப்பு பணிகளுக்காக பிரதான ஓடுபாதை மற்றும் இரண்டாம் நிலை ஓடுபாதை மூடப்படுவதால் ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சில விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பராமரிப்பு பணி தொடர்பாக ஏற்கனவே விமான நிலையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.