இன்று(01) இலங்கை வந்துள்ள ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள்…

(FASTNEWS|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் இன்று ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மொஸ்கோ தலை நகரிலிருந்து 52 சுற்றுலா பயணிகள் இவ்வாறு ரஷ்யாவுக்குச் சொந்தமான எஸ் யூ 6265 விமானத்தின் மூலம் இன்று காலை பண்டாரநாக்க ச்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தாம் அறிந்திருந்த போதிலும் தாம் திட்டமிட்ட படி இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.