(FASTNEWS|COLOMBO) சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.
08 மணித்தியால பணிநேரம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இலங்கையில் உள்ள மொத்த சனத்தொகையில் 50.2 வீதமான தொழிலாளர்கள் காணப்படுவதுடன், அவர்களில் 32.4 வீதமானவர்கள் பெண்கள் என சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்தில்கொண்டு இந்த வருடம் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதை அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக்கல்லூரியில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
இதுதவிர, ஜே.வீ.பி தமது கட்சி தலைமையகத்தில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.
இதேவேளைஇ ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் மே தினத்தை கொண்டாடவுள்ளது.