இன்று(02) இரவு முதல் கொட்டாஞ்சேனையில் வீதி போக்குவரத்து மட்டு

(FASTNEWS|COLOMBO) – முகத்துவாரம் – முத்துவேல் மாவத்தை புனித ஜேம்ஸ் சந்தி முதல் வாசல சந்தி வரையான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நீர் குழாய்கள் பொருத்தும் நடவடிக்கை காரணமாக இன்று(02) இரவு 10.00 மணி முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 9 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 12 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை மற்றும் 16 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 19 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை அந்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை மற்றும் 9 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 12 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை போக்குவரத்து நடவடிக்கை மட்டுப்படுத்தப்படவுள்ளது.

குறித்த தினங்களில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் வாகனச் சாரதிகள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.