நாட்டின் சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை ,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று(06) பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.
ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
#rishma