(FASTNEWS COLOMBO) – மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று(14) பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.