கொழும்பில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் காலை வேலையில் நோர்ட்டன் பிளேஸ் கின்சி வீதியின் ஒரு வழிப்பாதை போக்குவரத்தின் நேரம் இன்று(18) முதல் அதிகரிக்கப்பட உள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வார நாட்களில் கின்சி வீதியில் இருந்து கேரி வித்தியாலயம் வரையான பகுதியில் இன்று(18) முதல் அமுலுக்கு வரும் வகையில் காலை 7.30 மணியில் இருந்து 8.00 மணி வரையில் ஒரு வழிப்பாதை திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கிங்ஸ்லி ரீஜன் சந்தியில் இருந்து கேரி வித்தியாலயம் வரையில் பயணிக்கும் வாகனங்கள் மருதானை – பொரள்ளை வீதி திசையிலே கின்சி பிளேஸ் ஊடாக வோர்ட் பிளேஸ் திசையிலே பயணிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.