இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) – ரயில்வே சேவை தரங்களில் காணப்படும் வேறுபாடுகளைக் களைவது தொடர்பில் அனுமதி பெறப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் இதுவரை அமுல்படுத்தப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து , ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரத்திலான தொழிற்சங்க ஊழியர்கள் இன்று(19) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

ரயில் சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் குறித்த இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே கண்காணிப்பு முகாமையளர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவருமான லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.