இன்று(19) 08 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

(FASTNEWS|COLOMBO) – வவுனியா நகரம் மற்றும் அதன் நகரை அண்டிய பகுதிகளில் இன்று(19) காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை 08 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்துக்கு நீரை விநியோகிக்கும் புதிய மார்க்கத்தை புதிய பிரதான மார்க்கத்துடன் இணைப்பதன் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.