புகையிரத சாரதிகள், ஒழுங்குமுறை கட்டுப்படுத்துனர் மற்றும் நிலைய அதிபர்கள், இன்று(20) நள்ளிரவு முதல், 48 மணிநேரம் முன்னெடுக்க இருந்த வேலைநிறுத்தப் போரட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பள முரண்பாடுகளுக்கு, தேசிய சம்பள மற்றும் சேவை ஊழியர் ஆளனி ஆணைக்குழு உரிய தீர்வை வழங்கவில்லை என்றும் உரிய தீர்வை வலியுறுத்தியே இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில் இயக்குநர்களின் மேற்பார்வையாளர் சங்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த இந்த கோரிக்கைகள் தொடர்பில், எழுத்துமூலமான உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதால், அந்த போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
(rizmira)