சபாநயாகர் கரு ஜெயசூரிய தலைமையில் இன்று(22) மதியம் 12.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்களிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று(21) ஒன்றிணைந்த எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விவாதத்திற்கான திகதி குறித்து ஆராயவே இன்று இவ்வாறு கூடவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது தவிர பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்த விவாதம் நடாத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
-Rishma