நாடளாவிய ரீதியில் இன்று(24) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தள்ளது.
சில இடங்களில், குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100mm அளவான பலத்த மழைவீழ்ச்சியும், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 75mm அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதோடு மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.