இன்று(10) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்காதிருக்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றிரவு(09) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் குறித்த விடயம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளைய தினம்(11) மீண்டும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது