இன்றைய ஆட்டத்தில் மலிங்க இல்லாதது பேரிழப்பே – கிரகாம் போர்ட் கவலை..

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று மோதல்களிலும் வெற்றிவாகை சூடி வெள்ளையடிப்பு செய்த இலங்கை அணி, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் சமீபகாலங்களில் திணறிக் கொண்டுள்ளது.

முன்னொரு தடவை இருபதுக்கு20 சாம்பியனாகத் திகழ்ந்த இலங்கை அணி புதிய உத்வேகத்தோடு இன்றைய(09) இறுதிப்போட்டியில் விளையாடி வென்றால்தான், டெஸ்ட் தொடரை வெள்ளையடிப்புச் செய்த சாகசம் ஓரளவிற்காவது இலங்கை அணியிடம் மீண்டும் வந்துசேரும்.

லசித் மலிங்க போன்ற வேக்கப்பந்து நட்சத்திரங்கள்  அணியில் இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை அணியின் பயிற்சியாளரான கிரகாம் போர்ட் தெரிவித்துள்ளார்.

இருபதுக்கு20 போட்டிகளில் இங்கு இடம்பெறாமையும் நல்ல பயிற்சி பெற்ற விளையாட்டு வீரர்கள் உருவாகாமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்று இவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், மாக்ஸ்வெல்லின் விக்கட்டை வீழ்த்துவதன் மூலமே ஆட்டத்தின் போக்கை மாற்றமுடியும் என்றும் பயிற்சியாளர் சுட்டிக்காட்டி கூறியிருக்கின்றார்.

நீண்டகாலமாக இலங்கை அணிக்காக விளையாடும் 39 வயதான டில்ஷான் இந்த ஆட்டத்துடன் சர்வதேச ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.