இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்றைய தினம் ஆரம்பமானது இந்நிலையில் இந்த போட்டி சுழல் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்துக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.
1999 ஆம் ஆண்டு காலி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது டெஸ்ட் போட்டிகளை ஆரம்பித்த ரங்கன ஹேரத் 92 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேவேளை 430 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ஒரே போட்டியில் 05 விக்கட்டுக்களை 34 முறை வீழ்த்தியுள்ள இடது கை சுழல் பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வெறும் 31 விக்கட்டுக்களையே வீழ்த்தியிருந்தார்.
2009 ஆண்டுக்கு பின்னரே அவர் 394 விக்கட்டுக்களை இதுவரை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை உலக கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான டெஸ்ட் விக்கட்டுக்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ரங்கன் ஹேரத் 07 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
அதேவேளை தான் பங்குபற்றிய 11 போட்டிகளில் ஆட்ட நாயகன் விருதை 05 முறை தனது அசாத்திய பந்து வீச்சு திறமையால் அவர் பெற்றுள்ளார்,
எனவே இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்ககார மஹேல ஜெயவர்த்தன டில்ஷான் போன்றவர்களின் ஓய்வை இதுவரை ஏற்றுக்கொள்ளாத இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கப்பட்டியலில் ரங்கன ஹேரத்தும் முக்கிய இடம்பிடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.