இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி சென்சுரியனில் இன்று(20) இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடம் அந்நாட்டில் வைத்து இருபதுக்கு இருபது போட்டியொன்றில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து நேற்று(19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்துத் தெரிவிக்கையில்;
“இம்மைதானம் நமக்கு சாதகமாக அமையும் என நம்புகின்றோம். பந்தினை காப்போர் 07 பேரும் பந்து வீச்சாளர்கள் 04 பேரும் இதற்காக களமிறக்கவுள்ளோம். தனுஷ்க குணதிலக உபாதை காரணமாக போட்டியில் விளையாடமாட்டார். அதற்குப் பதிலாக தனஞ்சய விளையாடவுள்ளார். ஆரம்பத் துடுப்பாட்டாளர்களாக தனஞ்சய மற்றும் திக்வெல்ல ஆகியோர் களமிறங்கவுள்ளனர்..” என தெரிவித்திருந்தார்.
“தலைமைப் பொறுப்பு எனக்கு கிடைக்காதவிடத்தும் நான் வீரர் என்ற முறையில் விளையாடுவேன். அணியின் தலைமைப் பொறுப்பு தற்காலிகமானது. ஆனால் அணிக்காக எப்போதும் தான் களத்தில் இருப்பேன்..” எனவும் மேத்யூஸ் தெரிவித்திருந்தார்.
இலங்கை அணி –
தனஞ்சய சில்வா, நிரோஷன் திக்வெல்ல, குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன, சசித் பத்திரன/திக்ஷீலா தி சில்வா, நுவன் குலசேகர, சுரங்க லக்மால், நுவன் பிரதீப்/லக்ஷான் சந்தகன், சீக்குகே பிரசன்ன…