இன்றைய(01) போட்டி மற்றும் உலகக் கிண்ண பயணம் குறித்து மேத்யூஸ் கருத்து…

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி, தம்புள்ளையில் இன்று(01) பிற்பகல் 2.30 மணிக்கு பகலிரவு போட்டியாக ஆரம்பமாகவுள்ளது.

குறித்த போட்டி குறித்து நேற்று(31) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் கருத்துத் தெரிவிக்கையில்;

“நாம் ஆடுகளத்தினை பார்வையிட்டோம்.. முதல் போட்டியின் போது ஆடிய ஆடுகளம் தான் இரண்டாவது போட்டிக்கும் அமையப் பெற்றுள்ளது.. அணியின் மன நிலை ஒருநிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் பெரிய மாற்றம் எதுவும் அணியில் இல்லை.. எவ்வாறாயினும் லஹிறு குமார விரலில் உபாதைக்குள்ளாகியுள்ளார்.. அந்த இடத்தில் மற்றும் தான் மாற்றம் இடம்பெறவுள்ளது.. என்றாலும் காலநிலை குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டும்.. நாம் சிறந்த மனநிலையில் களமிறங்கத் தயாராகவே உள்ளோம்…

..காலியிலோ அல்லது எஸ்.எஸ்.சி மைதானத்தில் விளையாடுவதனை விட தம்புள்ளையில் காலநிலை மாறுபடுகிறது. அதிக காற்றுடன் கூடிய காலநிலையினால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பாக மாறும். என்றாலும் அதனை காரணம் காட்ட முடியாது.. எமது முதல் தோல்வியினை இதில் சமப்படுத்த முயற்சிக்கிறோம்..

..நாம் உலகக் கிண்ணத்தினை கருத்திற் கொண்டு விளையாடவே எண்ணியுள்ளோம்.. துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படும், அதனை வீரர்கள் அனைவரும் நன்கு அறிந்துள்ளனர்.. ஆதலால் அவர்கள் எந்நேரத்திலும் களமிறங்க தயாராகவே உள்ளனர்…”

 

R.Rishma