இன்றைய(10) போட்டியின் ஆரம்ப திட்டம் மற்றும் மேத்யூஸ் குறித்து சந்திமால் கருத்து…

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் உள்ளதாகவும், அதில் சிறந்த இரண்டு வீரர்கள் போட்டியில் இணைந்துக் கொள்ளப்படுவதாகவும், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இன்று(10) தம்புள்ளையில் இடம்பெறவுள்ள முதலாவது ஒருநாள் போட்டிக்கு (பகல்/இரவு)முன்னதான ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

‘‘நம்மிடம் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் இருக்கின்றனர். அதில் இருவர் போட்டிக்காக இணைக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு அணியினதும் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களது திறமைகளை தமக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிரமம் நிலவுகின்றமையானது உண்மையே.. என்றாலும் களத்தடுப்பினை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். கடந்த காலங்களில் எமது இயலாமையாக பந்து காப்பதனை குறிப்ப்பிடலாம். ஆதலால் இம்முறை பந்து காப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நான் முன்னர் வேகமான துடுப்பாட்ட வீரராகவே இருந்தேன். என்றாலும் பின்னர் பொறுப்புக்கள் வழங்கப்பட்ட பின்னர் என்னில் மாற்றங்கள் நிகழ்ந்தது எனலாம்.. இப்போது பயிற்சியாளர்களுடன் கதைத்து மீளவும் வேகமான துடுப்பாட்ட வீரராக களமிறங்க முயற்சிக்கிறேன். .’

அவ்வாறே ஏஞ்சலோ மேத்யூஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்தும் மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணி தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார்.

‘அனைவரும் அறிந்தது ஒன்றே.. ஏஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு அணிக்கு தேவையான ஒரு வீரர் என்று… எனினும், உடற் தகைமை பிரச்சினை காரணமாக அவருக்கு வாய்ப்புத் தவறியது.. எவ்வாறாயினும், இங்கிலாந்து அணியானது உலகின் முதல்தர அணி என்பதை நாம் நன்கு அறிகிறோம்.. எச்சந்தர்ப்பத்திலும் களமிறங்கக் கூடிய வீரர்கள் குறித்த அணியில் உள்ள போதிலும், எமது சுழற் பந்து வீச்சாளர்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை.. அவர்களுக்கு அது சவாலாக இருக்கும்.. அவர்கள் அணியில் உள்ள ஆதில் ரஷீத் மற்றும் மொயின் அலி ஆகிய சுழற் பந்து வீச்சாளர்கள் எமக்கு சவாலாக அமையும்…’’

இலங்கை அணியினர்…

தினேஷ் சந்திமால்(தலைவர்), உபுல் தரங்க, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, திசர பெரேரா, சதீர சமரவிக்கிரம, டசுன் ஷானக, லசித் மாலிங்க, அமில அபோன்சு, துஷ்மந்த சமீர, அகில தனஞ்சய, நுவன் பிரதீப், லக்ஷான் சந்தகென்

இங்கிலாந்து அணியினர்…

ஜோ ரூட் (தலைவர்), மொயின் அலி, ஜேம்ஸ் என்ட்ரசன், ஜொனி பெயஸ்ட்ரோ, ஸ்டுவர்ட் ப்ரோட்,ரொறி பிரான்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கரன், ஜோய் டென்லி, கேடன் ஜெனிங், ஜெக் லீச், ஒலீ பொப், ஆதில் ரஷீத், பென் ஸ்டாக்ஸ், ஒலீ ஸ்டோன், க்றிஸ் வோக்ஸ்