இன வேற்றுமைகள் இன்றும் நீக்கப்படவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 70 வருட காலமாக நாட்டில் நிலவிய பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதனை கட்சியாக அல்லாது சுயாதீனமாக தாம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் நேற்று(31) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“.. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்தேன். மக்களின் பல பிரச்சினைகளை அறிந்த கொண்டேன். இந்நாட்டில் 70 வருட காலமாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பல்வேறு வேற்றுமைகள் இன்றும் நீக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இந்த தேசத்தில் இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சேவையாற்றவுள்ளேன். இந்நாடு முழுவதும் யுத்தம் இல்லாது ஒருமைப்பாட்டுடன் இருக்கும் வகையில் இயலுமானவரை முயற்சிக்கவுள்ளேன். இவ்வாறான முரண்பாடுகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை சிந்திக்க வேண்டும். யுத்தம் எப்படி உருவானது? ஏன் உருவானது? சமாதானம் உருவானதன் பின்னர் பாதைகள் சீர்செய்யப்பட்டதை விட வேறு எதுவும் நடைபெறவில்லை. மக்களின் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.