இந்த மாதம் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இடியுடன் கூடிய மழை பெய்யாவிட்டாலும் ஓரளவு தொடர்ச்சியாக மழை பெய்யும் எனவும், பருவப் பெயர்ச்சி மாற்றங்களினால் தொடர்ச்சியாக இவ்வாறு மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் லலித் சந்திரபால மேலும் தெரிவித்துள்ளார்.