இம்மாதம் 20 தொடக்கம் விஷேட கரையோர ரயில் சேவைகள்

கரையோரப் பிரதேச புகையிரத மார்க்கத்தில் மேலும் புதிய புகையிரத சேவைகளை இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.

குறித்த சேவையானது, இம்மாதம் 20ம் திகதி முதல் அந்த புதிய புகையிரத சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க கூறினார்.

வார இறுதி நாட்களில் இந்த புகையிரத சேவைகள் செயற்படுத்தப்பட உள்ளதாகவும் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவது நோக்கம் என்றும் அவர் மேலும் கூறினார்.