இம்ரான்கான் 14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய பிரதமராக பதவியேற்பு…

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பாகிஸ்தானின் சுதந்திரமான ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் பதவியேற்பார் என தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி அறிவித்துள்ளதாக சர்வசே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இதில் முன்னாள் பிரதமரும், ஊழல் வழக்கில் சிறையில் இருப்பவருமான நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) மற்றும் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் போட்டியிட்டன.

இதில் வெளியான முடிவுகளின்படி அதிகபடியான வாக்குகளை பெற்று இம்ரான்கானின் கட்சி பாகிஸ்தானில் புதிய அரசை அமைப்பது உறுதியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.