(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது அந்நாட்டு பொலிஸார் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது நெருங்கிய உதவியாளான ஷெஹ்பாஸ் கைது, விளக்கமறியல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள், மற்றும் பெண் நீதிபதி ஒருவரை எச்சரிக்கும் வகையில் நேற்றுமுன்தினம் இம்ரான் ஆற்றிய உரையை அடுத்து, இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதி வுசெய்யப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் உதவியாளர் ஷெஹ்பாஸ் ஜில் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களை தூண்டிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் எனக் கூறிய இம்ரான் கான், ‘உங்களை நாம் விட்டுவிட மாட்டோம்’ என்றார்.
அத்துடன் ஷெஹ்பாஸ் ஜில்லை விளக்கமறியில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, ஸெபா சௌத்திரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.
ஸெபா சௌத்திரிக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.
இந்நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7 ஆவது பிரிவின் கீழ் இம்ரான் கானுக்கு எதிராக பொலிஸார் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
இம்ரான் கான் கைது செய்யப்படக்கூடும் என ஊகங்கள் பரவியுள்ளன.
அவரை கைது செய்யவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இம்ரான் கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இம்ரான் கானின் பிரிஐ கட்சி முக்கியஸ்தர்கள் இது குறித்து அரசாங்கத்துக்கு எச்சரிக்ககை விடுத்துள்ளனர். இம்ரான் கானி கைது ஒரு சிவப்புக் கோடாக அமையும் என
இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அவரின் வீட்டை சூழ்ந்துள்ளனர் என பிரிஐ கட்சி முக்கியஸ்தவர் பவாத் சௌத்திரி தெரிவித்துள்ளார்.