இயக்குநரானாரா நடிகை பிரியா மணி

கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது வென்றவர்.

இதன் பிறகு நடிகர் தனுஷ், விஷாலுடன் நடித்த அவர் தமிழில் வாய்ப்பு குறைந்ததை தொடர்ந்து கன்னடத்தில் நடித்தார்.
 இந்நிலையில், நடிகைகளாக இருந்து இயக்குநரான நடிகைகள் ஸ்ரீபிரியா, ஜெயசித்ரா, ரேவதி, லட்சுமி ராமகிருஷ்ணன் வரிசையில் பிரியாமணியும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார்.

நடிகர் சுதீப் நடிக்க தமிழி, கன்னடம், மலையாளத்தில் தயாராகும் படத்தை நடிகை பிரியாமணி இயக்க உள்ளார். இந்த படத்திற்காக நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.