இயக்குநர் செல்வா படத்தில் இலங்கையர்களுக்கு வாய்ப்பு

பிர­பல நடிகர் அஜித்­கு­மாரை ‘அம­ரா­வதி’ என்ற வெற்­றிப்­ப­டத்­தி­னூ­டாக தமிழில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யவர் இயக்­குநர் செல்வா.

‘தலை­வா­சல்’, ‘கர்­ணா’, ‘ஆசையில் ஒரு கடி­தம்’, ‘ஜேம்ஸ்­பாண்­டு’, ‘பூவேலி’, ‘இரோ­ஜா­வ­னம்’, ‘நான் அவ­னில்லை’ போன்ற வெற்­றிப்­ ப­டங்­களை  அவர் இயக்­கி­யுள்ளார்.

அவர் இயக்கும் 26 ஆவ­து படத்­துக்கு ‘தொப்­புள்­கொடி’ என்று பெய­ரிட்­டுள்­ளனர்.

‘அதிபர்’ படத்தை தயா­ரித்த தயா­ரிப்­பாளர் டி.சிவ­கு­மாரின் பென் கண்ஸ்­டோ­ரி­டியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் நிறு­வனம் இந்த படத்தை தயா­ரிக்­கி­றது. இலங்­கையில் நடந்த உண்மை சம்­ப­வத்தை தழு­விய இந்த படத்தின் கதையை தயா­ரிப்­பாளர் T.சிவ­கு­மாரே எழுதி இருக்­கிறார்.

‘அதிபர்’ படத்தின் கதை இவரின் வாழ்­கையில் நடந்த உண்மை சம்­பவம் என்­பது தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் படத்­துக்கு அதிபர் படத்தில் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மான விக்ரம் செல்வா இசை­ய­மைத்­துள்ளார். இவர் சிறந்த இசைப் பின்ன­ணியை கொண்­டவர். பல முன்னணி இசை­ய­மைப்­பா­ளர்­க­ளோடு பணி­பு­ரிந்­துள்ளார். படத்தில் ஐந்­து­ பாடல்கள் இடம்­பெற்­றுள்­ளன. பாட­லா­சி­ரியர் நா.முத்­துக்­குமார் இரண்டு பாடல்­களை எழு­தி­யுள்ளார்.

இலங்கை கவிஞர் அஸ்மின் இப்­ ப­டத்தில் மூன்று பாடல்­களை எழு­தி­யுள்ளார். விஜய் அண்­ட­னியின் ‘நான்’ திரைப்­ப­டத்தில் இடம்­பெற்ற ‘தப்­பெல்லாம் தப்­பே­யில்லை’ பாட­லி­னூ­டாக பாட­லா­சி­ரி­ய­ராக அறி­மு­க­மாகி, ஜிப்­ரான், ஸ்ரீகாந்த்­ தேவா போன்ற முன்னணி இசை­ய­மைப்­பா­ளர்கள் பல­ரோடு பணி­பு­ரிந்­தி­ருக்கும் அஸ்மின் சிறந்த வெளி­நாட்டு பாட­லா­சி­ரி­ய­ருக்­கான ‘எடிசன்’ விருது பெற்­றவர்.

இப்­ ப­டத்தில் இவர் எழு­தி­யுள்ள ஒரு பாடலில் இசை­ய­மைப்­பாளர் டி.இமான் இசை­ய­மைப்­பா­ள­ராக தோன்றி நடிக்­க­வுள்ளார்.

ஈழத்­த­மி­ழர்­களின் வலியை கூறும் இவர் எழு­திய மற்­று­மொரு பாடல் ‘கன்­னத்தில் முத்­த­மிட்டால்’ திரைப்­ப­டத்தில் வைர­முத்து எழு­தி­யுள்ள ‘விடை­கொடு எங்கள் நாடே’ பாடல் போல் உலக தமி­ழர்­க­ளி­டையே மிகப்­பெ­ரிய அதிர்வை ஏற்­ப­டுத்தும் பாட­லாக உரு­வா­கி­யுள்­ள­தென இயக்­குநர் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

இப்­ பா­டலை தேவா, முகேஷ் ஆகியோர் இணைந்து பாடி­யுள்­ளனர். இப்­ப­டத்தில் நான்கு முன்­னணி நாய­கர்கள் நடிக்க இரு­கி­றார்­கள். நாய­கிகள் மற்ற நடி­கர்கள் தெரி­வு நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கி­றது. இப்­ ப­டத்தின் நாய­கி­களில் ஒரு­வ­ராக நடிப்­ப­தற்கு இலங்கை நடிகை ஒரு­வ­ருக்கு வாய்ப்­ப­ளிப்­ப­தாக இயக்­குநர் செல்வா அறிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் ginosl2013@gmail.com என்ற மின்னஞ்சலினூடாக உங்கள் புகைப்படங்கள், விபரங்களை அனுப்பிவைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களுக்கு 0777586888 (ராஜா ) என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம்.